அரவான்மணம் அணியும் திருமார்புடையான்
ஒருவாவரை விழைவோனுறை நாரணன்காண்

சரமாமழை பொழியும் இருபேடியரோ
டுரதம்பயில் வரதன் திருவேங்கடவன்

மதியீனர்கள் மன்றம் விதிகோர்த்திடினும்
கதியீனர்கள் என்று நிதம் தூற்றிடினும்
சதியீன்ற அரங்கில் பதியைந்துடையாள்
துதியோங்க இரங்கும் மதுசூதனன்காண்

புவியன் நம்பி

Advertisements